×

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி அலெக்ஸ் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம்

சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி அலெக்ஸ் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். முதலீட்டாளர்களிடமிருந்து ரூ. 2,400 கோடி வசூலித்து ஏமாற்றியதாக ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து ஆருத்திரா நிதி நிறுவன இயக்குனர்கள், 14 பேர் மீதும் ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஏற்கனவே இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக இருந்த ஹரிஷ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பாஜக விளையாட்டு பிரிவில் முக்கிய பொறுப்பை பெறுவதற்காக அந்த கட்சி நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக ஹரிஷ் வாக்குமூலம் அளித்துள்ளர்.

இதையடுத்து பாஜக நிர்வாகி அலெக்ஸ் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட பாஜக நிர்வாகி சுதாகர் ஆகியோர் நேரில் விசாரணைக்கு ஆஜராக போலீசார் உத்தரவிட்டனர்.அதனைப்படி அலெக்ஸ் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஹரிஷ் உடன் தனக்கு தொடர்பு இல்லாத நிலையில் தம்மை சம்மந்தப்படுத்திய காவல்துறை அறிக்கையை தவறு என அவர்களிடம் எடுத்துரைத்திருப்பதாக அலெக்ஸ் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜகவில் பணம் கொடுத்து பதவி வாகும் நிலை இல்லை என்றும் தன்னை யாரோ சிக்கவைத்திருப்பதாக சந்தேகம் என அவர் தெரிவித்துளளார். இந்த விவகாரத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களின் பணத்தை மீட்டு தரவேண்டும் என்றும் அலெக்ஸ் வலியுறுத்தியுள்ளர்.

The post ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி அலெக்ஸ் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Alex ,Economic Offenses Office ,Arudra Financial Institution ,Chennai ,Arudra ,Economic Crimes Office ,Dinakaran ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...